காலைக் கடன் சிரமம் இல்லாமல் போக... நைட் இந்த கஷாயம் மட்டும் குடித்தால் போதும்: டாக்டர் நித்யா சொல்லும் வீட்டு வைத்தியம்
மலச்சிக்கல் பிரச்சனைக்கான பல்வேறு காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இப்பிரச்சனைக்கு மருத்துவர் நித்யா எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கான பல்வேறு காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இப்பிரச்சனைக்கு மருத்துவர் நித்யா எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் பலர் எதிர்கொள்ளும் பொதுவான ஆரோக்கியப் பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். இது சங்கடத்தை ஏற்படுத்துவதுடன், அன்றாட பணிகளையும் பாதிக்கக்கூடியது. மலச்சிக்கல் பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
Advertisment
நீர்ச்சத்து குறைபாடு என்பது மலச்சிக்கலுக்கு ஒரு நேரடி காரணமாகும். உடலில் போதுமான நீர் இல்லாதபோது, மலம் கடினமாகி வெளியேற சிரமமாகிறது. இதேபோல், நமது உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாதது மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
மலம் கழிப்பதற்கான உந்துதல் ஏற்படும்போது அதை அடக்குவது அல்லது தாமதப்படுத்துவது, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் குடலின் இயல்பான செயல்களை மழுங்கடித்து மலத்தை கடினமாக்கும். உடற்பயிற்சியின்மை அல்லது குறைவான உடல் செயல்பாடு, குடலின் இயக்கத்தைக் குறைக்கும்.
புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, உணவுப் பழக்கவழக்கங்கள், தூக்க முறை மற்றும் தினசரி வழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தற்காலிக மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும், சில வகையான மருந்துகள் மலச்சிக்கலை பக்கவிளவுகளாக ஏற்படுத்தலாம். அந்த வகையில் மலச்சிக்கல் பிரச்சனைக்கான தீர்வை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை காஸ்மோ ஹெல்த் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
கடுக்காயை உடைத்து அதன் தோல் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் வெட்டிவேர், அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சுமார் மூன்று கிளாஸ் தண்ணீர், ஒரு கிளாஸ் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்தக் கசாயத்தை வடிகட்டி இரவு நேரத்தில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக குடிக்கும் போது உடலில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் வெளியேறி விடும். குறிப்பாக, குடல் பகுதி முற்றிலும் சுத்தமாகி விடும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும் என்று அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.