கொத்து கொத்தாக முடி உதிருதா? இந்தக் கீரையை மட்டும் மிஸ் பண்ணாதீங்க: டாக்டர் நித்யா
முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் பின்பற்றக் கூடிய சில டிப்ஸை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றினால் முடி உதிர்வு குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவருக்கு தற்போது முடி உதிர்வு பிரச்சனை காணப்படுகிறது. இதற்கான காரணங்களை மருத்துவர் நித்யா விவரித்துள்ளார்.
Advertisment
அதன்படி, நாம் சாப்பிடும் உணவில் அதிகப்படியாக புளிப்புச் சுவை இருந்தால் நச்சுகள் உருவாகும். இவை, சருமம் மற்றும் முடியில் தான் தெரிய வரும். இதன் காரணமாகவும் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தைராயிட் பிரச்சனை இருப்பவர்களுக்கும் முடி உதிர்வு அதிகமாக காணப்படும்.
இந்த சூழலில் இரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றாமல் எத்தனை ஹேர்பேக் அல்லது ஹேர் ஆயில்கள் பயன்படுத்தினாலும் முடி உதிர்வு நீங்காது என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலில் இரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும்.
முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் இரும்புச் சத்து இருக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். முருங்கைக் காய், கேரட் பீட்ரூட் மற்றும் சுண்டைக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் உடலில் உஷ்ணம் குறைந்து இரும்புச் சத்தும் கிடைக்கும். குறிப்பாக, முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச் சத்து இருக்கிறது. எனவே, முருங்கைக் கீரையை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இதேபோல், கறிவேப்பிலையும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே, கறிவேப்பிலையை பொடியாக்கி தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். இப்படி செய்யும் போது முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
எனினும், முடி உதிர்வு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும் இருப்பதால் இவை அதிகரிக்கும் போது மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.