ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்... வீட்டிலேயே இயற்கை வயாகரா; இப்படி செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, என்ன மருந்துகளை சாப்பிடலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, என்ன மருந்துகளை சாப்பிடலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nithya tips

இன்றைய சூழலில் ஆண்களிடையே விறைப்புத் தன்மை சார்ந்த பிரச்சனை நிறைய இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனால் குடும்ப வாழ்வில் நிறைய பிரச்சனை ஏற்படுவதாகக் கூறி ஏராளமான ஆண்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர்.

Advertisment

ஆனால், இந்தக் குறைபாடு குறித்து மிகுந்த வருத்தம் கொள்ள தேவை இல்லை என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். ஏனெனில், இது போன்ற பிரச்சனையை, மன அழுத்தம் அதிகப்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார். சர்க்கரை நோயாளிகள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் போன்றவர்களுக்கு இப்பிரச்சனை அதிகமாக இருக்கிறது.

இதனை உணவு முறைகள் மூலம் சீரமைக்க முடியும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார். உடல் உஷ்ணம் அதிகரித்திருக்கும் போது விறைப்புத் தன்மை தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும். எனவே, உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் உணவுகளை சாப்பிடலாம்.

இது தவிர கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையும் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீர்முள்ளி விதைகள், வெங்காய விதைகள், முள்ளங்கி விதைகள், அரச விதைகள், ஆல விதைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி பாலில் வேக வைத்து அதன் பின்னர் உலர்த்த வேண்டும்.

Advertisment
Advertisements

இவை நன்றாக காய்ந்ததும் பொடியாக்கி இரவு நேரத்தில் பாலில் கலந்து குடிக்கலாம். கூடுதலாக ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மருந்து இயற்கையான வயாகராவாக செயல்படும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

இதேபோல், அஸ்வகந்தாவும் பாலியல் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் இதனை எடுத்துக் கொள்ளும் போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இதனை மற்ற சில மருந்துகளுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் நித்யா கூறியுள்ளார்.

நன்றி - Sadhguru sai creations Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: