பித்தம்... கண் எரிச்சலும், கால் பாதம் வெடிப்பும் ஆரம்ப அறிகுறி; சீரகம் மூலமாக எளிய தீர்வு: டாக்டர் நித்யா
உடலில் பித்தம் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான அறிகுறிகளையும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை எப்படி குறைப்பது என்பதற்கான வழிமுறையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் உடலில் பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பித்தம் தான் என மருத்துவ நித்யா தெரிவித்துள்ளார். எனவே, உடலில் பித்தம் அதிகரிப்பதை சில அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை தற்போது பார்க்கலாம்.
Advertisment
உடலில் உஷ்ணம் அதிகரிப்பு பித்தத்தை குறிக்கும். இதன் காரணமாக முதலில் தலை முடி உதிர்வு ஏற்படும். மேலும், கண்களில் எரிச்சல் உருவாகும். சிலருக்கு வாய்ப்பகுதி உலர்ந்து போவதை போன்ற உணர்வு தோன்றும்; சருமம் வறட்சியாகும். இவை அனைத்தும் உடலில் பித்தம் அதிகரிப்பதற்கான அறிகுறிகளாக இருக்கிறது என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இவை மஞ்சள் காமாலை நோய்க்கும் வழிவகுக்கக் கூடும். பித்தம் அதிகரிப்பது காரணமாக கால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். மேலும், படபடப்பு போன்ற உணர்வும் பித்தம் அதிகரித்தவர்களிடம் காணப்படும். இரவு நேரத்தில் தூக்கமின்மையும் பித்தத்தை குறிக்கும். இந்த அறிகுறிகளின் மூலம் பித்தம் அதிகரிப்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலில் பித்தத்தை குறைக்க சீரகம் பயன்படுகிறது. சீரகத்தை லேசாக வறுத்து பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சீரக பொடியை அரை ஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம். இது பித்தத்தை குறைக்க உதவும். இதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisement
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.