சம்மரில் உடல் உஷ்ணம் குறைய… வெண்டைக்காய் இரவில் ஊறவைத்து காலையில் குடிங்க; டாக்டர் நித்யா

கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Nithya summer tips

கோடை காலத்தின் போது நம்முடைய உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் உருவாகும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பொறுத்துக்கொள்ள முடியாத கண் எரிச்சல், முகம் மற்றும் கழுத்தில் எரிச்சல் உணர்வு, ஆசனவாய் பகுதியில் எரிச்சல் மற்றும் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

Advertisment

இத்தகைய சூழலில் நாம் சில உணவு மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். அதிக சர்க்கரை, செயற்கை சுவைகள் கூட்டப்பட்ட கார்பனேட் பானங்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இவை சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இது போன்ற பானங்களை அருந்த வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காரமான மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து விடலாம். பர்கர்கள் மற்றும் பீட்சா உணவுகளையும் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். இதற்கு பதிலாக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.

மேலும், வெண்டைக்காயை இரண்டு துண்டாக வெட்டி அரை லிட்டர் தண்ணீரில் இரவு ஊற வைத்து, அந்த நீரை காலையில் குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா வலியுறுத்துகிறார். இதேபோல், 200 மி.லீ மோரில் ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் கலந்து குடிக்கலாம். கூடுதலாக, நன்னாரி சர்பத், பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் கலந்த கலவையை குடிக்கலாம்.

Advertisment
Advertisements

பெண்களை பொறுத்தவரை உடல் வெப்பத்தை குறைக்கவும், வெள்ளைப்படுதல் பிரச்சனையை கட்டுப்படுத்தவும் வெள்ளை பூசணி லேகியம் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைத்து வேர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - Mr Ladies Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: