சர்க்கரை நோய் என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாகும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சித்த மருத்துவ முறைகள் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்து டாக்டர். நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் உணவுமுறை முக்கியப் பங்காற்றுகிறது. மா இஞ்சி, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு மூலிகையாகும். இது செரிமானத்திற்கும், இரத்த சுத்திகரிப்பிற்கும் உதவுகிறது.
துவையல் செய்முறை: மா இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து, அத்துடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வடிகட்டி அருந்தலாம். அல்லது, மா இஞ்சியை துவையலாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இது செரிமான பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளும் செரிமானக் குறைபாடுகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளை உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது நல்லது.
Advertisment
Advertisements
சிறுநாகப்பூ: இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, இன்சுலின் சுரப்பை இயற்கையாகத் தூண்டுகிறது.
பிரண்டை: எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுத்து, உடல் சோர்வை நீக்குகிறது.
சிறுகாஞ்சூரி, பற்படாகம், நீர்முள்ளி: சர்க்கரை நோயால் ஏற்படும் சோர்வைக் குறைக்க உதவுகின்றன.
கொன்றை மற்றும் மருதம் பட்டை: இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கப் பயன்படும் முக்கிய மூலிகைகளாகும். இந்த மூலிகைப் பொடியை அரை ஸ்பூன் எடுத்து, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுமுறை, மருந்துகள் மட்டுமின்றி, போதுமான இரவு உறக்கம் மற்றும் மலச்சிக்கலைத் தவிர்ப்பதும் அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்வதுடன், உணவுப் பழக்கவழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சித்த மருந்துகளை எடுக்கும்போது, ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவ மருந்துகளை உடனடியாக நிறுத்தக் கூடாது. ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி படிப்படியாக டோசேஜ்ஜைக் குறைக்கலாம்.
இந்த மூலிகைப் பொடி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், உயர் இரத்த அழுத்தம் (BP) மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பொடியை மோரில் கலந்து தினமும் இரண்டு வேளை அருந்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.