/indian-express-tamil/media/media_files/2025/04/06/5iGeIgKr5IAiL9w7G8V1.jpg)
சர்க்கரை நோய் கட்டுப்பாடு என்பது பலருக்கு சவாலாக இருக்கும் நிலையில், பாகற்காய் போன்ற இயற்கை உணவுகள் பெரும் பங்காற்றுகின்றன. கசப்புச் சுவை காரணமாக பாகற்காய் சாப்பிட தயங்குபவர்களும், எப்படி உட்கொள்வது என்று தெரியாதவர்களும் டாக்டர் நித்யா முக்கியமான ஒரு காய் பற்றி மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
பலரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பாகற்காய் அவசியம் என்று நம்புகின்றனர். இது ஓரளவு உண்மைதான். ஆனால், வெறும் கசப்புச் சுவைக்காக பாகற்காயை அதிக அளவில் உட்கொள்வது, அல்சர் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, சரியான முறையில், அளவோடு உட்கொள்வது முக்கியம்.
சந்தையில் கிடைக்கும் பெரிய பாகற்காய்களை விட, சிறிய காட்டு பாகல் மற்றும் மிதி பாகல் போன்ற வகைகளில் சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தி அதிகம் உள்ளது. பெரிய பாகற்காய்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
பாகற்காய் ஜூஸ்: காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது சிலருக்கு நெஞ்செரிச்சல் போன்ற அசிடிட்டி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, அசிடிட்டி உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
அசிடிட்டி இல்லாதவர்கள், தினமும் குடிக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் குடிக்கலாம். இது டேஸ்ட் பட்களை பாதிக்காமல், பயனை அளிக்கும்.
பாகற்காயை டீப் ஃப்ரை (deep fry) செய்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகப்படியான எண்ணெய் சேர்ப்பது அதன் மருத்துவ குணங்களைக் குறைத்துவிடும். சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, பின்னர் கொதிக்க வைத்து, மசாலா சேர்த்து சமைப்பது அதன் முழுமையான மருத்துவப் பலன்களைப் பெற உதவும்.
தினமும் பாகற்காய் சாப்பிட விரும்புபவர்கள், இரவில் தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்தலாம். சிறிய பாகற்காய் துண்டுகளை (சுமார் 200 மில்லி) தண்ணீரில் போட்டு, அதனுடன் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய் மற்றும் ஒரு நெல்லிக்காய் வற்றல் சேர்த்து மூடி வைக்கவும்.
காலையில் இந்த தண்ணீரை மட்டும் குடிப்பது மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளைக் குறைக்கும். இது பாகற்காயின் கசப்பைக் குறைத்து, அதன் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெற உதவும்.
குடல் ஆரோக்கியம்: பாகற்காய் குடலில் உள்ள கழிவுகளையும், குடல் புழுக்களையும் வெளியேற்ற உதவுகிறது.
புண்கள் குணமாக: சர்க்கரை நோயாளிகளுக்கு பாதங்களில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த, பாகற்காய் இலைகளை அரைத்து சாறு எடுத்து புண்களில் தடவலாம். இது புண்களை படிப்படியாக குணப்படுத்தும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்று: சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள், பார்வை குறைபாடு போன்றவற்றை சரிசெய்யவும் பாகற்காய் உதவுகிறது.
ஆவாரை பஞ்சாங்கம்: பாகற்காயுடன் ஆவாரை பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தும்போது, நாள்பட்ட சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும்.
நாவல் கொட்டை கற்பம்: நாவல் கொட்டை கற்பம் சர்க்கரை நோய்க்கு ஒரு ஈடு இணையற்ற மருந்து என்று சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. நாவல் கொட்டையை நெல்லிக்காய் சாறு, தூதுவளை சாறு போன்ற பல மூலிகைச் சாறுகளில் ஊறவைத்து, கற்பமாகப் பயன்படுத்தும் போது, சர்க்கரை அளவு நல்லாவே குறையும். காலை மற்றும் இரவு, அரை ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து இதை உட்கொள்ளலாம். ஆகவே, பாகற்காய் சர்க்கரை நோய்க்கு ஒரு முக்கியமான மருந்தாக உள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.