குடலில் கழிவுகள் தங்கினால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்போதுதான் அன்றைய நாளும் ஆரோக்கியமாக இருக்கும். குடல் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாக சாப்பிடக்கூடிய உணவுகள் முறையாக செரிமானம் ஆக டாக்டர். நித்யா தனது யூடியூப் பக்கத்தில் ஒரு சில டிப்ஸ் கூறுகிறார்.
Advertisment
டிப்ஸ் 1: செரிமான கோளாறுகள் இருப்பவர் பிரிட்ஜில் இருந்து சூடு செய்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக இட்லி, தோசை மாவுகளை வைத்து சாப்பிடக்கூடாது. மாவு பொருட்கள வைத்து சாப்பிடக்கூடாது.
டிப்ஸ் 2: பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல ஒரு நாள் சமைத்த உணவை அடுத்த நாள் வைத்து சாப்பிடக்கூடாது. அந்த உணவில் இருக்கக்கூடிய டாக்ஸின்கள் உடலில் சென்று குடல் பகுதிக்கு பிரச்சினையை உண்டாக்கும்.
டிப்ஸ் 3: இரவில் அதிகமான பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
இப்போது குடலில் ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
டிப்ஸ் 4: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து குடல் பகுதியில் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
டிப்ஸ் 2: எல்லா வகையான காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். முட்டைக்கோஸ் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இந்த முட்டைக்கோஸை வேகவைத்து சாலட் மாதிரி சாப்பிடலாம்.
டிப்ஸ் 3: அதேபோல முட்டைக்கோஸுடன் தக்காளியை சேர்த்து சாப்பிடலாம். இது குடல் புண்களையும் சரியாக்கும்.
டிப்ஸ் 4: அதேபோல இஞ்சி, மா இஞ்சி சேர்த்து கசாயம், துவையல் போன்றவற்றை சாப்பிடலாம். நெஞ்சு சளியை போக்குவது மட்டுமல்லாமல் வயிற்றுப் பகுதியை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.