தைராய்டு வீக்கம்... வெந்நீருடன் இந்தப் பொடி; காலை 'டீ' மாதிரி குடிங்க: டாக்டர் நித்யா டிப்ஸ்
தைராய்டு இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்று. இதனை உணவுகள் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியும் என்றும் அதற்கான ஒரு ட்ரிங் பற்றியும் டாக்டர் நித்யா கூறுகிறார்.
தைராய்டு இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்று. இதனை உணவுகள் மூலமாக கண்ட்ரோல் செய்ய முடியும் என்றும் அதற்கான ஒரு ட்ரிங் பற்றியும் டாக்டர் நித்யா கூறுகிறார்.
தைராய்டு ஹார்மோன் உடலின் பல்வேறு அடிப்படை செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியம். செரிமானம், மெட்டபாலிசம் முதல் இனப்பெருக்க ஆரோக்கியம் வரை பல முக்கிய விஷயங்களுக்கு இது தேவை. தைராய்டு பிரச்சனைகளுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள் பற்றி டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
பெண்களுக்கு: மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை உருவாக்கம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு தைராய்டு ஹார்மோன் முக்கியம்.
ஆண்களுக்கு: விந்தணு உற்பத்தி, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலை மற்றும் ஆண்மைக்கு இது அவசியம்.
குறிப்பாக, TSH அளவு அதிகமாக இருப்பது குழந்தைப்பேறின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக அமையலாம்.
Advertisment
Advertisements
தைராய்டு வீக்கத்திற்கான காரணங்கள்:
உணவுப் பழக்கங்கள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகள், நீண்ட காலமாக வெளியூர் உணவுகளை சாப்பிடுவது போன்றவை தைராய்டு வீக்கத்திற்கு காரணமாகலாம்.
வாழ்க்கை முறை: தூக்கமின்மை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு தைராய்டு ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
ஆரோக்கியப் பிரச்சனைகள்: இரத்த சோகை (அனீமியா) தைராய்டு வீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
உணவு முறைகள்: அதிக கால்சியம் மற்றும் புரதம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நாட்டு காய்கறிகள், நூக்கல், சௌ சௌ போன்றவற்றை அதிகம் சேர்க்கலாம். முளைகட்டிய பயறு வகைகள், கேழ்வரகு, தினை, சாமை போன்ற சிறுதானியங்கள் இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்ய உதவும்.
வாய்விடங்க சூரணம்: தைராய்டு வீக்கம் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளுக்கு, அரை ஸ்பூன் வாய்விடங்க சூரணத்தை வெந்நீரில் கலந்து காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு குடிக்கலாம். இது இரத்தத்தை சுத்திகரித்து, உள் உறுப்புகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும்.
மூலிகை டீ: 20g கிராம்பு, 20g ஓமம், 20g அதிமதுரம், 100g உலர்ந்த எலுமிச்சை இலைகள் ஆகியவற்றை பொடி செய்து, தினமும் காலையில் தண்ணீரில் கருப்பட்டி சேர்த்து டீ போல குடிக்கலாம். இது தைராய்டு வீக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்ய உதவும்.
வெளிப்பூச்சு: தைராய்டு வீக்கம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சள், வசம்பு, முருங்கை பட்டை பொடி ஆகியவற்றை வெந்நீரில் கலந்து பற்று போடலாம். இதை இரவில் தூங்கும் முன் கழுத்துப் பகுதியில் பற்று போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் சுழற்சி சீராக இருக்க வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது PCOD பிரச்சனை இருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.