கொத்து கொத்தாக முடி கொட்டுதா? பாலுடன் மிளகு சேர்த்து இப்படி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா டிப்ஸ்

முடி நிறைய கொட்டுதா அப்போ அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறியிருக்கிறார்.

முடி நிறைய கொட்டுதா அப்போ அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Nithya hair care

முடி கொட்டுதல் எப்பது எல்லோருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான். ஆனால் சிலருக்கு முடி அதிகமாக கொட்டும் அதற்கான காரணம் மற்றும் பின்பற்ற வேண்டிய முறையை பற்றி பார்ப்போம்.

Advertisment

உணவுப்பழக்கம், காற்று மாசு போன்ற பல விஷயங்கள் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். முடி உதிர்வைத் தவிர்க்க அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் முடி உதிர்வை கணிசமாகத் தடுக்கலாம் என்று டாக்டர் நித்யா காஸ்மோ ஹெல்த் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

முடி உதிர்தலுக்கு காரணம்: 

உடல் உஷ்ணம்
தைராய்டு
டாக்ஸின்ஸ்
சிறுநீரக பிரச்சனை
கல்லீரல் பிரச்சனை 

Advertisment
Advertisements

டிப்ஸ்: மிளகை பசும்பாலில் போட்டு கொதிக்கவிட்டு வெயிலில் காயவைத்து மிளகு கல்ப்பமாக எடுத்து மிக்ஸியில் அரைத்து இந்த பவுடரை தேனில் கலந்து காலை உணவுக்கு முன் தினமும் சாப்பிடலாம்.

இப்படி செய்து வர முடி நன்கு வளரும். முடி வளர்ச்சிக்கு உணவு அதாவது ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். நல்ல சத்தான உணவுகள் நல்ல தூக்கம் முக்கியமாகும்.

இந்த சூழலில் இரத்தத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றாமல் எத்தனை ஹேர்பேக் அல்லது ஹேர் ஆயில்கள் பயன்படுத்தினாலும் முடி உதிர்வு நீங்காது என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முதலில் இரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும்.

முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் இரும்புச் சத்து இருக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். முருங்கைக் காய், கேரட் பீட்ரூட் மற்றும் சுண்டைக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் உடலில் உஷ்ணம் குறைந்து இரும்புச் சத்தும் கிடைக்கும். குறிப்பாக, முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச் சத்து இருக்கிறது. எனவே, முருங்கைக் கீரையை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Best tips for hair growth this summer Amazing foods that stimulates hair growth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: