உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைக்கு தூக்கமின்மை காரணமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சிலருக்கு முற்றிலும் அமைதியான சூழ்நிலையில் இருந்தால் தான் சரியாக தூக்கம் வரும்.
Advertisment
ஆனால், குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லை. அந்த வகையில், குறட்டைக்கு வீட்டு வைத்திய முறையில் எளிமையாக தீர்வு எப்படி காணலாம் என்று மருத்துவர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
குறட்டை என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை. இதனை எளிமையான சில வீட்டுக்குறிப்புகள் மூலம் இதனை ஈஸியாக சரிசெய்யலாம் என டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். முதலில் குறட்டை வருவதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
தசைகள் தளர்ந்து காற்று போக வழி இல்லாததாலும் குறட்டை வரும்
உடல் பருமன் கூட குறட்டைக்கு வழிவகுக்கும்
அதிக பி.பி., கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு குறட்டை வரும்
இதயம் சார்ந்த பிரச்சனை வயிறு சார்ந்த பிரச்சனைக்கு குறட்டை அறிகுறியாக இருக்கலாம்
அதிக உப்புச்சத்து காரணமாக உடலில் அதிக வீக்கம் ஏற்பட்டு குறட்டை வரும்
அதிகமான உடல் வலி
Advertisment
Advertisements
குறட்டையை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
கீழ்த்தாடை பகுதிகளில் உள்ள தசைகளை டைடன் செய்ய வேண்டும்.
சுடுதண்ணீரை தேய்த்து தளர்ந்த தசைகளை இறுக்கமாக்க வேண்டும்
கருஞ்சீரகம் தைலம் வாங்கி அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து வர தளர்ந்த தசைகள் இறுக்கமாகும்
தினமும் ஒரு கிராம்பு எடுத்து மென்று வந்தால் குறட்டை பிரச்சனை குணமாகும்
ஆயில் புல்லிங் செய்யும்போது தசைகள் இறுக்கமாகும். நல்லெண்ணெய் வாயில் ஊற்றி தினமும் 20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.
இவற்றை செய்வதன் மூலம் குறட்டை சத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்த முடியும் என டாக்டர் நித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.