வயாகரா மாத்திரையை தூரப் போடுங்க... 100 குதிரை பலம் தரும் இந்தப் பொடி; இப்படி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

ஆண்மையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். மேலும், இதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்மையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கு அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். மேலும், இதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ashwagantha uses

இயற்கையாகவே விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பது ஆண்களின் விருப்பமாக இருக்கும். அதனை எவ்வாறு செய்யலாம் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மக்கள் மனதில் அஸ்வகந்தா என்பது இயற்கையான வயகரா என்று பதிவாகி விட்டதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். புற்றுநோய் செல்களை அழிப்பதில் தொடங்கி துக்கமின்மை பிரச்சனையை சீராக்குவது என அஸ்வகந்தாவிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

இது தவிர ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத் தன்மை குறைபாடு மற்றும் விந்தணுக்கள் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கும் அஸ்வகந்தா பயன்படுவதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை பயன்படுத்துவதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன.

பொதுவாக அஸ்வகந்தா பொடி கடைகளில் சாதாரணமாக கிடைக்கும். இதனை மருந்தாக எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பசும்பாலில் வேக வைத்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதன் அடிப்பகுதியில் சிறிது பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் மேற்புறத்தில் ஒரு வெள்ளைத் துணியில் அஸ்வகந்தா பொடியை போட்டு வேகவைத்த பின்னர் இதனை பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisements

இதனை சாதாரணமாக பாலில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இது டானிக் மற்றும் லேகியம் வடிவத்திலும் கிடைக்கிறது. இவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகள் இதனை சூரணமாக சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

இதே போன்று சிட்டுக் குருவி லேகியம் ஆண்களின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் மருந்தாக பயன்படுவதாக பலர் கூறுவார்கள். இதிலும், அஸ்வகந்தா உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை சேர்த்து லேகியம் வடிவில் வைத்திருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். 

எனவே, சரியான முறையில் அஸ்வகந்தா எடுத்துக் கொள்ளும் போது அது நிச்சயம் பலன் அளிக்கும். மேலும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதனை சாப்பிடலாம்.

நன்றி - Milestone Media Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Health benefits of ashwagandha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: