நீர்த்துப் போன விந்து... பசை மாதிரி கெட்டியாக மாற நெய்யில் வறுத்த இந்தப் பொடி; 2 வேளை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

இத்தகைய பிரச்சனைக்கு எளிமையான முறையில் வீட்டு வைத்தியம் வாயிலாக தீர்வு காண முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதற்காக சில பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.

இத்தகைய பிரச்சனைக்கு எளிமையான முறையில் வீட்டு வைத்தியம் வாயிலாக தீர்வு காண முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதற்காக சில பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Sperm quality incerase

தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு அதிக மன அழுத்தம் தரக் கூடிய முக்கிய பிரச்சனையாக, விந்து நீர்த்துப் போகுதல் விளங்குகிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை மருத்துவ உலகம் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நபர்களுக்கு, அவை நீர்த்துப் போகும் சாத்தியக் கூறுகள் இருக்கிறது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். பல்வேறு காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஹோர்மோன் பிரச்சனைகள், தைராயிடு கோளாறு, உடல் பருமன், நாள்பட்ட சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளின் வெளிப்பாடாக விந்தணுக்கள் நீர்த்துப் போகக் கூடும் என்று மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், இத்தகைய பிரச்சனைக்கு எளிமையான முறையில் வீட்டு வைத்தியம் வாயிலாக தீர்வு காண முடியும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இதற்காக சில பொருட்களை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 

Advertisment
Advertisements

அந்த வகையில், முருங்கை விதைகள் 100 கிராம், சடாமாஞ்சில் பொடி 10 கிராம், ஓமம் 10 கிராம், கசகசா 10 கிராம், ஜாதிக்காய் 10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சிறிதளவு நெய் சேர்த்து வறுத்து பொடியாக்க வேண்டும்.

இந்தப் பொடியை, காலை மற்றும் மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவிற்கு நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது நீர்த்துப் போன விந்தணுக்கள் பசை போன்று கெட்டியாகும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

இது மட்டுமின்றி வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இவற்றை பின்பற்றும் போது விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். 

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to improve sexual health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: