கல்லீரல் என்பது நமது உடலில் ஒரு முக்கிய உறுப்பு. இது நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு உதவுவதுடன், பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Advertisment
கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை டாக்டர் பிளஸ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், கல்லீரலில் பிரச்சனை இருந்தால் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். குறிப்பாக, சரும வறட்சி, தைராய்டு தொடர்பான பிரச்சனைகள், மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படக் கூடும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப நிலையிலேயே கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியங்கள் மூலம் சரிசெய்ய முடியும் என்றாலும், தீவிரமான பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
Advertisment
Advertisements
அதன்படி, ஒரு தேநீர் தயாரித்து குடிப்பதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை சீராக்கி ஃபேட்டி லிவர் பாதிப்பை குறைக்க முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இதற்காக, மஞ்சள் கரிசாலை பொடி 100 கிராம், மஞ்சள் தூள், வசம்பு பொடி, ஏலக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் இரண்டு கிளாஸ் தண்ணீரில் கலந்து, அதனை ஒரு கிளாஸாக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும் அதன் பின்னர் வடிகட்டி குடிக்கலாம்.
இந்த தேநீரை குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை, ஃபேட்டி லிவர், பித்தப்பை கற்கள் போன்றவற்றை குணப்படுத்துவதுடன் சேர்த்து இரத்தத்தில் இருந்து நச்சுக்களை நீக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.