முடி உதிரக் கூடாதா? அப்ப உடல் சூடு குறையணும்; அதுக்கு இந்த ஒரு ஜூஸ் போதும்: டாக்டர் நித்யா
ஒரு ஜூஸ் தயாரித்து குடிப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது உடலில் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
ஒரு ஜூஸ் தயாரித்து குடிப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது உடலில் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
இன்றைய சூழலில் தலை முடி உதிர்வு பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கிறது. அந்த வகையில் தலை முடியை எவ்வாறு ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்று மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த தகவல்களை மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
உடல் உஷ்ணத்தின் காரணமாக தலை முடி அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம். இதற்காக காரம், புளிப்பு வகை உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடல் உஷ்ணத்தை குறைக்க எண்ணெய் குளியல் எடுக்கலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 7 மணி நேரம் உறங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும். இதனை பின்பற்றும் போது தலை முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும்.
இது தவிர ஒரு ஜூஸ் தயாரித்து குடிப்பதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது உடலில் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
Advertisment
Advertisements
அதன்படி, வெள்ளரிக்காய், பீட்ரூட், முழு நெல்லிக்காய், ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை ஆகியவற்றுடன் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்த ஜூஸை காலை நேரத்தில் 100 முதல் 200 மில்லி லிட்டர் அளவிற்கு நாள்தோறும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்யும் போது முடி உதிர்வு பிரச்சனை சரியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.