சாகும் வரை மலச் சிக்கல் எட்டிப் பார்க்காது... வெந்தயத்தை இப்படி சாப்பிட்டு வாங்க: டாக்டர் நித்யா டிப்ஸ்
உடலில் ஏற்படும் வறட்சியே மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் என்றும், இது எலும்புகள், சருமம் மற்றும் குடல் பகுதியை பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரையும் மலச்சிக்கல் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான உடல்நல பிரச்சனை மலச்சிக்கல். இது வெறும் அசௌகரியமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், பல நோய்களுக்கு இதுவே மூல காரணமாக அமையலாம் என மருத்துவர் நித்யா கூறுகிறார். இது குறித்த பல்வேறு தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
உடலில் ஏற்படும் வறட்சியே மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் என்றும், இது எலும்புகள், சருமம் மற்றும் குடல் பகுதியை பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரையும் மலச்சிக்கல் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடலில் கழிவுகள் தேங்குவது குடல்களை மட்டுமல்லாமல், முழு உடலையும் எதிர்மறையாக பாதிக்கும் என்று மருத்துவர் நித்யா வலியுறுத்துகிறார். நீண்ட கால மலச்சிக்கல் வாயிலாக மூல நோய் (piles), ஃபிஸ்துலா (fistulas) மற்றும் மலக்குடல் புற்றுநோய் (rectal cancer) போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார். எனவே, தினமும் கழிவுகளை வெளியேற்றுவது மிகவும் அவசியம்.
இதற்காக, உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். வழுவழுப்பான தன்மை கொண்ட கீரைகளான பருப்புக்கீரை, பசலைக்கீரை, புளிச்சக்கீரை, மணத்தக்காளிக் கீரை, வல்லாரை மற்றும் புளியாரிக் கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
மேலும், மலச்சிக்கல் பாதிப்பிற்கு வெந்தயத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். இதேபோல், தான்றிக்காய் மற்றும் மாசிக்காய் ஆகிய இரண்டையும் காலை மற்றும் மாலை இரு வேளையும் 5 கிராம் அளவில் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்தால் 10 நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.