சர்க்கரை நோயால் ஆண்மை குறைவு… விறைப்புத் தன்மை பிரச்சனை சரியாக இந்த உணவுகளை சாப்பிடுங்க; டாக்டர் நித்யா
சர்க்கரை நோயின் தாக்கத்தால் விறைப்புத் தன்மையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை நோயின் தாக்கத்தால் விறைப்புத் தன்மையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை நோய் ஆண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, சர்க்கரை நோய் கண்டறியப்பட்ட சில ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.
Advertisment
எனினும், இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு சில உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். இதற்காக உணவின் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது அவசியம் ஆகும்.
அதன்படி, சாதாரண வெள்ளை அரிசிக்கு மாற்றாக மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி மற்றும் கருட சம்பா போன்ற அரிசி வகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். இது தவிர எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வெண்டைக்காய் மற்றும் சுண்டைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காய விதைகளை பொடியாக்கி அவற்றை அரை ஸ்பூன் அளவிற்கு நெய்யுடன் சேர்த்து உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். விந்தணுக்களின் ஆற்றலை மேம்படுத்த ஷிலாஜித் எனப்படும் பாரம்பரிய மருந்தை பயன்படுத்தலாம். ஆனால், சரியான முறையில் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் இவற்றை உபயோகிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
சர்க்கரை நோயால் ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று கூறும் மருத்துவர் நித்யா, அதற்கு பிரத்தியேகமான கவனிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.