ஈரலில் ஒட்டி இருக்கும் கொழுப்பை கரைக்கும்... இப்படி கஞ்சி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா
மதுப்பழக்கம் இல்லாத நபர் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டால் எளிமையான முறையில் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதற்கான வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுப்பழக்கம் இல்லாத நபர் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டால் எளிமையான முறையில் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதற்கான வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் உடலில் இருக்கு முக்கியமான உறுப்புகளில் கல்லீரல் முதன்மையானது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய சூழலில் ஃபேட்டி லிவர் பிரச்சனை நிறைய பேருக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
மதுப்பழக்கம் இல்லாத நபர் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டால் எளிமையான முறையில் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதற்கான வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வகையான உணவு முறை மாற்றம் மூலம் கல்லீரலில் இருக்கு கொழுப்பை அகற்றலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்காக காலை நேரத்தில் ஒரு கஞ்சி தயாரித்து குடிக்கலாம்.
இதற்காக தேவையான அளவு பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், 200 மில்லி லிட்டர் முருங்கைக் கீரை சாறு, 50 மில்லி லிட்டர் கரிசலாங்கண்ணி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் பச்சரிசியுடன் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இது தவிர 300 கிராம் கருப்பு கொள்ளை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இத்துடன் சிறிதளவு பச்சை பயிறையும் பொடியாக்கி கலக்க வேண்டும். இவை அனைத்தையும் அரிசியுடன் கலந்து, மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக, அரை ஸ்பூன் நெய், சீரகம், பூண்டு, இஞ்சி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான கஞ்சி தயாராகி விடும். இந்தக் கஞ்சியை தினமும் காலை நேரத்தில் சுமார் 40 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.
இதன் மூலம் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஃபேட்டி லிவர் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Health Cafe Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.