காலில் உணர்வின்மை என்பது தற்காலிகமாக ஏற்படலாம். அதாவது தூங்கும் போது அல்லது நீண்ட நேரம் நிற்கும் போது போன்ற காரணங்களால் கூட ஏற்படலாம். போதிய இரத்த ஓட்டம் இல்லாதது, நீரிழிவு நோய் அல்லது நரம்பு பாதிப்பு போன்ற காரணங்களால் கூட இதுபோன்று உணர்வின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது என டாக்டர் நித்யா ஹெல்தி டுடே தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
அதற்கு கோவக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் இதனை எப்படி சில வீட்டுக்குறிப்புகள் மூலம் சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.
ஜூஸ் செய்முறை:
கோவக்காய் எடுத்து விதை நீக்கிவிட்டு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தேவைப்பட்டால் உப்பு போட்டு குடிக்கலாம். வடிகட்டி குடிக்கவும்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 1: இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் வைக்கலாம்.
டிப்ஸ் 2: இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும் பாதங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
டிப்ஸ் 3:நல்ல இரத்த ஓட்டத்தை தூண்டும் காலணிகளை பயன்படுத்தவும்.
டிப்ஸ் 4: உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு கால்களை நன்கு நீட்டவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.