வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் உணவு முறை ஆகியவை விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கலாம் என்று டாக்டர் நித்யா தனது யூடியூப் பகத்தில் கூறுகிறார்.
Advertisment
விந்தணு என்பது ஒரு ஆண் இனப்பெருக்க உயிரணு ஆகும், இது உடலுறவின் போது பெண் முட்டையை கருவுறச் செய்கிறது. இது பெண் இனப்பெருக்க அமைப்பு வழியாக நீந்தி அங்குள்ள முட்டையை கருவுறச் செய்வதற்கான ஒரு சிறப்பு செல் ஆகும்.
ஆண்மை அதிகரிக்க சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, பூசணி விதை, ஆளி விதை ஆகியவை சாப்பிடலாம். இதனை தனித்தனியே ஊறவைத்து சாப்பிட முடியவில்லை என்றால் எல்லா விதைகளையும் வறுத்து அரைத்து பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
செய்முறை: தேவையான விதைகள் அனைத்தையும் எடுத்து வறுத்து ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் பால் அல்லது தண்ணீரில் கலந்து இருவேளை குடிக்கலாம். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
அதுமட்டுமின்றி இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
பூசணி விதைகள் சத்தானவை மற்றும் ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை சாதகமாக பாதிக்கும். இந்த சிறிய ஆனால் வலிமையான விதைகள் ஆரோக்கியமான விந்து மற்றும் ஆண் கருவுறுதலை பராமரிக்க ஒரு சிறந்த துத்தநாக மூலமாகும்.
சூரிய காந்தி விதைகள் இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, எள், பூசணி மற்றும் ஆளி விதைகளுடன் சூரிய காந்தி விதையையும் கலந்து தினமும் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.