உடல் உஷ்ணம் குறைய நம் பாரம்பரிய பானம் போதும்… இப்படி குடிங்க; டாக்டர் நித்யா

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குறைக்க வேண்டும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குறைக்க வேண்டும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Body heat tips

கோடை காலத்தின் போது நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கூறுவார்கள். அந்த வகையில் உடல் உஷ்ணத்தை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குறைக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment

வெயிலின் காரணமாக சருமத்தில் தொடங்கி உடலின் உள் உறுப்புகள் வரை நிறைய பாதிப்பு ஏற்படுகின்றன. உடலில் நீர்ச்சத்தை சரியாக பராமரிக்கும் போது உஷ்ணத்தால் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளை நாம் தடுக்க முடியும்.

குடல் பகுதியை சீராக வைத்திருக்க ப்ரோபையோட்டிக் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இதற்காக, பழைய சாதத்தில் தயிர் சேர்த்து சாப்பிடலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். இதன் மூலம் உடல் உஷ்ணத்தையும் குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, சித்த மருத்துவத்தில் நிறைய மருந்துகளை நீராகாரத்துடன் எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, சாதம் வடித்த பின்னர் அது ஆறியதும், அதில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இந்த தண்ணீரை மறுநாள் காலை வடித்து குடிக்கலாம்.

Advertisment
Advertisements

அவ்வாறு, பாரம்பரிய முறையில் நாம் குடிக்கும் இந்த பானம் நிறைய நன்மைகளை அளிக்கிறது. உஷ்ணத்தால் ஏற்படும் சரும நோய்கள், குடல் பாதிப்பு, பைல்ஸ் போன்ற பிரச்சனைகள், உடல் சூட்டை தணிப்பதன் மூலம் குணமாகும்.

இது தவிர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் இது மருந்தாக அமைகிறது என்று கூறப்படுகிறது. எனவே, இது போன்ற பாதிப்புகளுக்கு நம்முடைய பாரம்பரிய நீராகாரம் பெரிதும் உதவுகிறது என்று மருத்துவர் நித்யா வலியிறுத்தியுள்ளார்.

நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Cooling fruits that helps to reduce body heat

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: