அமெரிக்க ஜிம் கைஸ் யூஸ் பண்ணும் நம்மூர் கிழங்கு: ஸ்வீட் மெசேஜ் கூறிய மருத்துவர்
அமெரிக்கா போன்ற நாடுகளில், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்த விரும்புவோர் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்த விரும்புவோர் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் பால் விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில், இந்த கிழங்கில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Advertisment
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை சீராக வெளியிடுகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்காது. இது மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளை விடச் சிறந்த தேர்வாக அமைகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில், வைட்டமின் ஏ (பீட்டா-கரோட்டின் வடிவில்), வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல அத்தியாவசிய வைட்டமின்களை ஒன்றாக அமைந்துள்ளன. வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். அதேபோல், வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்த விரும்புவோர் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். இது உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவுகிறது.
Advertisment
Advertisements
குறிப்பாக, சர்க்கரைவள்ளிக் கிழங்கை சமைப்பதும் மிக எளிதாக இருக்கும். அதன்படி, கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது போட வேண்டும். இவை நன்றாக வெந்த பின்னர் எடுத்து சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.