உடலில் வீக்கம்? இது நுரையீரல் ஆபத்து அறிகுறி... இந்த உணவு இனி வேண்டாம்: டாக்டர் பிள்ளை
கார்பனேட்டட் பானங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி சுவாசத்தை பாதிக்கும். அந்த வகையில், இத்தகைய செயற்கையான பானங்கள் பருகுவதை தவிர்த்து விடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கார்பனேட்டட் பானங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி சுவாசத்தை பாதிக்கும். அந்த வகையில், இத்தகைய செயற்கையான பானங்கள் பருகுவதை தவிர்த்து விடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நம்முடைய நுரையீரலில் தீங்கு விளைவிக்கக் கூடிய உணவு பொருட்கள் குறித்து மருத்துவர் பிள்ளை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் காணலாம்.
Advertisment
அதன்படி, டின் அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் நுரையீரலை பாதிக்கக்கூடிய இரசாயனங்கள் உள்ளன. எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை வீட்டிலேயே சமைத்த புதிய உணவுகளை சாப்பிடலாம் என்று மருத்துவர் பிள்ளை அறிவுறுத்துகிறார்.
ஆஸ்துமா, மூச்சுத் திணறல் அல்லது வீசிங் போன்ற நாள்பட்ட நுரையீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இவை ஒவ்வாமை, வீசிங் மற்றும் சளி தொந்தரவுகளை அதிகரிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
அதிகப்படியான உப்பு உடலில் நீரைத் தேக்கி வீக்கத்தை ஏற்படுத்தும். இது நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறலை அதிகப்படுத்தும். எனவே, நிறைய உப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என மருத்துவர் பிள்ளை வலியுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
பெப்சி, கோகோ கோலா, மிராண்டா போன்ற கார்பனேட்டட் பானங்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கி சுவாசத்தை பாதிக்கும். அந்த வகையில், இத்தகைய செயற்கையான பானங்கள் பருகுவதை தவிர்த்து விடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் காரமான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சல் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காரமான உணவுகளை உண்ணும்போது தயிர் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், குளிர் காலத்தில் நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் தயிரைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.