விந்தணு அதிகரிக்க அவசியமான சத்துக்கள் இவை தான்… இந்த 5 உணவுகளை நோட் பண்ணுங்க; டாக்டர் பிள்ளை
விந்தணுக்களின் ஆற்றலை உணவு முறை மாற்றம் மூலம் அதிகரிக்கலாம் என்று மருத்துவர் பிள்ளை தெரிவித்துள்ளார். அதற்கான உணவு பட்டியலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விந்தணுக்களின் ஆற்றலை உணவு முறை மாற்றம் மூலம் அதிகரிக்கலாம் என்று மருத்துவர் பிள்ளை தெரிவித்துள்ளார். அதற்கான உணவு பட்டியலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் பிள்ளை கூறுகிறார். குறிப்பாக, ஆண்களுடைய விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைகிறது என்று தனது யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில் உணவு முறை மாற்றம் மூலமாக ஆண்களின் விந்தணுக்களை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்றலாம் என்று மருத்துவர் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆண்மையை அதிகரிக்கும் சத்துகளில் புரதச் சத்து முதன்மையானதாக இருக்கிறது. அசைவ உணவுகளில் மீன், முட்டையில் வெள்ளைக் கரு, சிக்கன், மட்டன் மற்றும் பீஃப் போன்றவற்றில் புரதச் சத்து அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் பிள்ளை கூறுகிறார். சைவ உணவுகளில் கிட்னி பீன்ஸ், கொண்டை கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.
அடுத்தபடியாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் சத்து மிகவும் முக்கியமானது. இது உடலில் இருக்கும் வீக்கம், நச்சுத்தன்மை ஆகியவற்றை போக்க உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ராலை குறைத்து ஆண்மையை இது அதிகரிக்கிறது. மீன் வகைகள், விதைகள், அவகேடோ பழம் போன்றவற்றில் இந்தச் சத்து காணப்படுகிறது.
Advertisment
Advertisements
இதேபோல் சின்க் சத்தும் இன்றியமையாதது. இது ஆண்மையை அதிகரிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. மேலும், விந்தணுக்களின் தரத்தை இது உயர்த்துகிறது. டார்க் சாக்லேட், பீஃப், பூசணி விதைகள் ஆகிய உணவுகளில் இருந்து சின்க் சத்தை பெற முடியும்.
வைட்டமின்கள் பி12, சி, கே, டி மற்றும் இ ஆகியவை ஆண்மையை அதிகரிக்க உதவுகின்றன. கொழுப்பு மீன் வகைகள், யோகர்ட், தயிர், முட்டை, பால், முழு தானியங்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் இது போன்ற வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
இது தவிர நார்ச்சத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவைப்படுகிறது. இது உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதற்காக காய்கறிகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நம்முடைய உணவு முறை இருக்கும் போது, ஆண்மையை மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும் என்று மருத்துவர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.