எந்த மாதிரியான மூட்டு வலியையும் போக்கும் வல்லமை... இந்த உணவை மிஸ் பண்ணாதீங்க: டாக்டர் ராஜ கோபால கிருஷ்ணன்

மூட்டு வலியை குணப்படுத்தி நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகளின் பட்டியலை மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.

மூட்டு வலியை குணப்படுத்தி நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகளின் பட்டியலை மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Doctor Raja Gopala krishnan

சிலருக்கு கடுமையான மூட்டு வலி இருக்கும். மேலும், எலும்பில் சத்துக் குறைபாடு காரணமாக அடிக்கடி ஃப்ரக்ச்சர் ஆகும் தன்மையும் இருக்கும். இவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மிக முக்கியமாக சத்துக் குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்படுகிறது. கால்சியம், வைட்டமின் டி3, இரும்புச் சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாஷியம் போன்ற குறைபாடுகள் காரணமாக மூட்டு வலி பாதிப்பு இருக்கும் என்று மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் கூறுகிறார்.

உணவு மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1200 மில்லி கிராம் கால்சியம் சத்து நமக்கு தேவைப்படுகிறது. கீரைகள், பால், பன்னீர், அசைவ உணவுகள் போன்றவற்றின் மூலமாக கால்சியம் சத்தை பெற முடியும் என்று மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வைட்டமின் டி-யை சூரிய ஒளியின் மூலமாக பெறலாம். அந்த வகையில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் இருக்கும் வெயிலில் இருந்து வைட்டமின் டி கிடைக்கும்.

Advertisment
Advertisements

அடுத்தபடியாக வைட்டமின் சி சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழங்களில் இருந்து வைட்டமின் சி சத்தை பெற்றுக் கொள்ளலாம். வைட்டமின் சி இருந்தால் மட்டுமே இரும்புச் சத்தை நம் உடல் உறிந்து கொள்ள முடியும் என்று மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் கூறுகிறார்.

இந்த சத்து நிறைந்த பொருட்களை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூட்டு வலியை குறைக்க முடியும் என்று மருத்துவர் ராஜ கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நன்றி - Health Cafe Tamil Youtube Channel

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Handy tips to reduce joint pain

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: