உடல் சுத்தமா இருக்கணுமா? அப்ப குடல் க்ளீன் அவசியம்; அதுக்கு இந்த ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் ராஜலட்சுமி
ஆரோக்கியத்தை மேம்படுத்த குடலை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்காக, ஆமணக்கு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த குடலை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்காக, ஆமணக்கு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான முறையில் மலத்தை வெளியேற்றவில்லை என்றால், கழிவுகள் குடலில் தங்கிவிடும். இதனால் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் கிருமிகள் உடலில் பரவி நோய்களை உண்டாக்கும் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார். மேலும், சத்துகள் சரியாக உறிஞ்சப்படாமல் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். இது குடல் கசிவு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது குறித்த பல்வேறு தகவல்களை டிரேடிஷனல் கேர் ஹாஸ்பிட்டல் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இந்தப் பிரச்சனையை சரி செய்ய, ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார். ஒரு வயது குழந்தை முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் அவ்வப்போது குடல் சுத்திகரிப்பு செய்வது அவசியம். சாதாரண ஆமணக்கு எண்ணெய் கடைகளில் கிடைக்கிறது. ஆனால், அதனை உபயோகிக்கக் கூடாது. மருந்து கடைகளில் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெயை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இது தவிர, ஆமணக்கு விதைகளை இளநீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் மேலே மிதக்கும் போது அதை எடுத்து பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் சித்த மருத்துவ கடைகளிலும் கிடைக்கும்.
அந்த வகையில், 1-3 வயது குழந்தைகளுக்கு 2 மி.லி பாலில் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து இரவு நேரத்தில் கொடுக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2.5 மி.லி முதல் 3 மி.லி வரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம். 35-50 கிலோ எடை உள்ளவர்கள் 5 மி.லி வரை இதனை உட்கொள்ளலாம். ஆரோக்கியமானவர்கள் அதிகபட்சமாக 6 மி.லி வரை உட்கொள்ளலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
எனினும், தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்த ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.