அறுவை சிகிச்சை அவசியம் இல்லை... நரம்பு சுருட்டலுக்கு இந்தப் பழத்தின் விதை பெஸ்ட்: டாக்டர் ராஜலட்சுமி

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலமாக இதனை குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக நடைபயிற்சி மேற்கொள்வது இதற்கு நல்ல தீர்வு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலமாக இதனை குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக நடைபயிற்சி மேற்கொள்வது இதற்கு நல்ல தீர்வு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Varicose issue

சிலரது கால்களில் நரம்புகள் பச்சை நிறம், கருநீல நிறங்களில் காட்சியளிக்கும். இந்த பாதிப்பை நரம்பு சுருட்டல் என்று கூறுவதாக மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு தகவல்களை ஏ.எஸ்.எம் இன்ஃபோ என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் இருக்கக் கூடும் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார். இந்தப் பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை என்பது முழுமையான தீர்வாகாது என்று அவர் வலியுறுத்துகிறார்.

எனவே, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலமாக இதனை குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக நடைபயிற்சி மேற்கொள்வது இதற்கு நல்ல தீர்வு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

உணவு வகைகளை பொறுத்த வரை பூண்டு சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர செம்பருத்திப் பூ தேநீர் குடிக்கலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், 50 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை சிறிதளவு மஞ்சளுடன் சேர்த்து காய்த்து, நரம்பு சுருட்டு பாதிப்பு இருக்கும் இடத்தில் கீழே இருந்து மேல் நோக்கி தேய்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

குறிப்பாக, பன்னீர் திராட்சையின் விதைகளை சாப்பிடும் போது இத்தகைய பாதிப்புகள் குறையும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். எனவே, நரம்பு சுருட்டல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Ayurvedic remedies to manage varicose veins

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: