சிறுநீரகக் கல் திரும்ப திரும்ப வருதா? தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுங்க; டாக்டர் ராஜலெட்சுமி
தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், செவ்வாழையின் மருத்துவ குணங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், செவ்வாழையின் மருத்துவ குணங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எல்லோரும் செவ்வாழை பழத்தை ஒரு உணவு பொருளாக கருதுகின்றனர். ஆனால், செவ்வாழை என்பது ஒரு அற்புதமான மருந்து என்று மருத்துவர் ராஜலட்சுமி வலியுறுத்துகிறார். அந்த வகையில் செவ்வாழை பழத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவ நன்மைகள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
அதன்படி, கண் பார்வையை மேம்படுத்தும் ஆற்றல் செவ்வாழை பழத்திற்கு இருப்பதாக அவர் கூறுகிறார். இதில் பீட்டா கரோடினாயிட்ஸ் என்ற சத்து இருக்கிறது. எனவே, 21 நாட்களுக்கு நாள்தோறும் செவ்வாழை பழத்தை சாப்பிடலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.
அடுத்தபடியாக, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சரியாக வைத்திருக்கும் குணம் செவ்வாழை பழத்திற்கு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, செவ்வாழை பழத்தில் அதிகப்படியாக பொட்டாஷியம் சத்து இருக்கிறது. இது சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
எனினும், சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பவர்கள் செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறுகிறார். ஆனால், செரிமானம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கு செவ்வாழை மருந்தாக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
ஏனெனில், செவ்வாழை பழத்தில் நார்ச்சத்து இருக்கிறது. இது மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. அதன்படி, 48 நாட்களுக்கு இரவு நேரத்தில் தொடர்ச்சியாக செவ்வாழை பழத்தை சாப்பிடலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
இது தவிர ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியம் மற்றும் பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை செவ்வாழை அதிகரிக்கிறது. இதற்காக, தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை மற்றும் பசும்பாலை சாப்பிடும் போது குழந்தையின்மைக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த செவ்வாழை பழத்தை, நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
நன்றி - ASM INFO Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.