/indian-express-tamil/media/media_files/2025/07/04/kidney-detox-drinks-2025-07-04-18-37-40.jpg)
சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை எவ்வாறு வெளியேற்றலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை டிரேடிஷனல் கேர் ஹாஸ்பிட்டல் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது சிறுநீரகத்தை சரியாக இயங்க வைப்பதற்கு சில வகையான உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சில உணவு பொருட்கள் உதவி செய்வதாக மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.
அதன்படி, கிரான்பெர்ரி பழங்களை தினமும் உட்கொள்வது நச்சுகளை வெளியேற்ற உதவும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, கே ஆகியவை நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சிறுநீர்ப்பாதையில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்வதை தடுக்கவும் உதவுகின்றன. மேலும், இவை சிறுநீர்ப்பாதை தொற்றுகளை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.
மேலும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் தர்பூசணி பழத்திற்கு இருக்கிறது. குறிப்பாக, இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி ஆகியவை உள்ளன. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தும். மேலும், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உற்பத்தியை தர்பூசணி பழம் சீராக்கும்.
இது தவிர வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, நச்சு நீக்கும் தன்மை மற்றும் கொலாஜன் உற்பத்தி ஆற்றல் கொண்டது என்று பரவலாக அறியப்படுகிறது. எனவே, சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் எலுமிச்சையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதற்காக, வெதுவெதுப்பான நீருடன் அரை எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடர் வினிகர், சிறிது புதினா சாறு சேர்த்து அருந்தும் போது, சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகள் வெளியேறும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். ஏனெனில், சிறுநீர்ப்பாதை தொற்றுகளை குறைக்கும் ஆற்றல் ஆப்பிள் சிடர் வினிகருக்கு இருக்கிறது. எனவே, இந்த பானத்தை 48 நாட்களுக்கு தினமும் அருந்தலாம் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.