ஹை பி.பி சர்ருனு குறையும்… எலுமிச்சை சாறில் இதை சேர்த்து குடிங்க; டாக்டர் சந்தோஷிமா

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு வீட்டு வைத்திய முறையை நாம் எவ்வாறு திறம்பட மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு வீட்டு வைத்திய முறையை நாம் எவ்வாறு திறம்பட மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார். அதனை இந்த செய்திக் குறிப்பில் நாம் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Blood pressure tips

இன்றைய சூழலில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறுடன், கால் ஸ்பூன் முதல் அரை ஸ்பூன் வரை பட்டை பொடி, இரண்டு சிட்டிகை சுத்தமான விரலி மஞ்சள் பொடி ஆகிய இரண்டையும் சேர்த்து கலந்து காலை நேரத்தில் குடிக்கலாம். இவ்வாறு தினசரி குடிக்கும் போது உயர் இரத்த அழுத்தம் குறையும் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார்.

இது தவிர சீரகத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம். அதன்படி, எண்ணெய் சேர்க்காமல் சீரகத்தை மட்டும் நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சீரக பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து தேன் அல்லது வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா குறிப்பிட்டுள்ளார்.

சீரகத்தில் இருக்கும் அன்டி ஹைப்பர்டென்சிவ் தன்மை, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, இதனையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இது போன்று வீட்டு வைத்திய முறையில் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள், தாங்கள் வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளை எக்காரணம் கொண்டும் உடனடியாக தவிர்க்கக் கூடாது. இவ்வாறு செய்யும் போது அவை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதனடிப்படையில், ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நன்றி - Madhavas Siddha Ayurveda Clinic Dr. Santhoshima Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Signs and symptoms of high blood pressure

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: