இனிப்பை கொல்லும் காய்... சுகரில் இருந்து சீக்கிரமே விடுதலை: சொல்லும் டாக்டர் செல்வா சண்முகம்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் காயை பற்றி டாக்டர் செல்வா சண்முகள் கூறுகிறார். இனிப்பை கொல்லும் அந்த காய் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் காயை பற்றி டாக்டர் செல்வா சண்முகள் கூறுகிறார். இனிப்பை கொல்லும் அந்த காய் நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய உணவுகள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக, கசப்புத் தன்மையுள்ள உணவுகளான பாகற்காய், கீழாநெல்லி, மணித்தக்காளி கீரை (குட்டி தக்காளியைப் போன்றது) போன்றவை சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக டாக்டர் செல்வா சண்முகம் டாக்டர் விகடன் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisment
சர்க்கரை நோய்க்குப் பல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும், பாரம்பரியமாக நெல்லிக்காய், நாவல் கொட்டை போன்றவற்றைச் சாப்பிடுவது போன்ற வழிமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் ஆன்டி-டயபெடிக் (சர்க்கரை நோய்க்கு எதிரான) பண்புகளைக் கொண்ட மூலிகைகள் என்பது உண்மையே. ஆனால், யாருக்கு, எப்படி, எந்த அளவில் கொடுக்க வேண்டும் என்பதை முறைப்படுத்துவது அவசியம்.
மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது சரியானதல்ல. சில மூலிகைகள் மருந்துணவு (medicated food) என்ற நிலையை அடைகின்றன. அத்தகைய மூலிகைகளில், மணித்தக்காளி, நெல்லிக்காய், கீழாநெல்லி, மற்றும் பாகற்காய் ஆகியவை முக்கியமானவை.
பாகற்காய் என்ற பெயரிலேயே அதன் குணம் அடங்கியுள்ளது. 'பாகு' என்றால் இனிப்பு, 'அற்காய்' என்றால் இல்லாத காய் – அதாவது, இனிப்பே இல்லாத காய் அல்லது இனிப்பைக் கொல்லக்கூடிய காய் என்று பொருள். பாகற்காயில், குறிப்பாக மிதிப்பாகல் வகைகளில் (சின்ன பாவை), கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகள் அதிகம். கொம்பு பாகலைத் தவிர்ப்பது நல்லது.
Advertisment
Advertisements
இந்தக் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகள் உடலுக்குள் செல்லும்போது, அவை இன்சுலின் போலவே செயல்பட்டு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாகற்காயை தொடர்ந்து உட்கொள்ளும் போது, நாளடைவில் சர்க்கரை நோய் இயல்பு நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாகவும் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.