ஆண் மலட்டுத்தன்மைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு, சரியான தீர்வுகளை மேற்கொள்வதன் மூலம் குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்று டாக்டர் சண்முக ரூபிணி செல்லா சித்தா க்ளீனிக் யூடியூப் பக்கத்தில் விளக்குகிறார்.
Advertisment
முன்கூட்டிய விந்து வெளியேற்றம்:
காரணம்: இது ஆண்மை குறைவுக்கான ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது மன மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டையும் சார்ந்தது. மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற நிலைகளில் இது பொதுவாகக் காணப்படும்.
தீர்வு: தினமும் வேர்க்கடலையுடன் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.
ஆண்மைத்தன்மை குறைவாக உள்ளவர்கள் முருங்கைப்பூவை எடுத்துக்கொள்ளலாம். முருங்கைப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், பொடிகள் அல்லது லேகியங்கள் ஆண்மைத்தன்மையை பொதுவாக அதிகரிக்கும். இது நல்ல பலத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கும்.
Advertisment
Advertisements
இதுதவிர ஆண் மலட்டுத்தன்மையை குணப்படுத்த செய்யக்கூடிய பொதுவான விஷயங்கள் பற்றியும் டாக்டர் கூறுகிறார்.
எப்போதாவது மது அருந்துவது அல்லது புகைபிடிப்பது போன்ற எந்த சாக்குப்போக்கையும் சொல்லாமல், முழுமையாக நிறுத்துவது மிகவும் நல்லது.
யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சி அல்லது உடல் பயிற்சி கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களில் இருக்க வேண்டும்.
உங்கள் உணவு சமச்சீரானதாக இருக்க வேண்டும். உங்கள் நீர் உட்கொள்ளல் அளவு சரியாக இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.