இம்யூனிட்டி வேணுமா? தேன், வேம்பு, மஞ்சள் உருண்டை... 7 நாள் இப்படி சாப்பிடுங்க: டாக்டர் ஷர்மிகா
நம் உடலை எவ்வாறு சுத்திகரித்து ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். மேலும், இவற்றின் அவசியம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஆகியவற்றால் பலரும் உடல் நல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். வயது பேதமின்றி நிறைய பேருக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கிறது.
Advertisment
சரியான நேரத்தில் தூங்காமல், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கணையம், கல்லீரல், சருமம் போன்ற அனைத்து உறுப்புகளையும் சுத்திகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் சில பொருட்களை சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். 3 அல்லது 4 வேப்பிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அம்மியில் வைத்து அரைத்து பசை பதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். மறுபுறம், கொஞ்சமாக தண்ணீர் எடுத்து, அத்துடன் சில துளிகள் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது, முதலில் பசை பதத்திற்கு தயாரித்து வைத்திருந்த வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்த கலவையை, சிறிய உருண்டையாக உருட்டி தேன் கலந்த தண்ணீரில் முக்கி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
Advertisment
Advertisements
இவ்வாறு 7 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக திட்டமிடும் ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை சாப்பிட வேண்டாம் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.