கால் டம்ளர் தண்ணீரில் 1/2 ஸ்பூன் இந்தப் பொடி... கல்லீரல் கொழுப்பை அப்படியே கரைக்கும்: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்
ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், இதில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபேட்டி லிவர் பாதிப்பு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், இதில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியர்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்சனை அதிகமாக பரவி வருவதாக மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளர். மது அருந்தாதவர்களில் கூட சுமார் 38 முதல் 49 சதவீதம் பேருக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு இருப்பதாக அவர் கூறுகிறார். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisment
அந்த வகையில், உடல் பருமன், அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவது, துரித உணவுகளை உட்கொள்வது, இரவில் நீண்ட நேரத்திற்கு பிறகு உணவு எடுத்துக் கொள்வது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஃபேட்டி லிவர் பாதிப்பு உருவாவதாக மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
இது தவிர வேறு ஏதேனும் உடல் உபாதைகளுக்காக அதிக நாட்கள் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் ஃபேட்டி லிவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.
அதன்படி, சாதாரணமாக நாம் அருந்தும் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். இது கல்லீரலை ஆரோக்கியமாக இயங்க வைக்க உதவி செய்கிறது. இதேபோல், குறைந்தது 90 நாட்களாவது கால் கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி பொடியை கலந்து குடிக்கலாம். இதனை விடியற்காலை அல்லது உணவுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
மேலும், சீரான உடற்பயிற்சி மற்றும் சரியான உறக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கூடுமானவரை சர்க்கரை மற்றும் மைதா சேர்த்த பொருட்களை தவிர்த்து விடலாம். இவை அனைத்தையும் பின்பற்றினால் ஃபேட்டி லிவர் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.