2 நெல்லி, கொஞ்சம் தேன்... உங்க குடல் மொத்தமும் க்ளீன் ஆகிடும்: டாக்டர் ஷர்மிகா
குடலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக மருத்துவர் ஷர்மிகா ஜூஸ் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். இதனை எவ்வாறு தயாரித்து பருக வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நம் உடலை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தினசரி குளிக்கிறோம். இதன் மூலம் சருமம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. வெளிப்புறமாக உடலை சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு குடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
Advertisment
தற்போதைய காலகட்டத்தில் துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் உணவுப்பழக்கம் மாற்றமடைந்து வருகிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இவை ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. அதனால், குடலில் இருக்கும் கழிவுகளை நீக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், குடலை எவ்வாறு இயற்கையான முறையில் சுத்தப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா விவரித்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை எடுத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
பின்னர், இதனை வடிகட்டி 50 முதல் 75 மில்லி லிட்டர் அளவிற்கு கிளாஸில் ஊற்றிக் குடித்து விடலாம். இந்த ஜூஸ் நம் வயிற்றில் இருக்கும் கழிவுகளை முற்றிலுமாக நீக்கி விடும் ஆற்றல் வாய்ந்தது. அவ்வாறு, வயிற்றுப் பகுதியில் இருந்து கழிவுகள் முற்றிலுமாக நீங்கியதும் ஒரு கிளாஸ் மோர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் தயிர் சாதம் சாப்பிடலாம்.
எனினும், இந்த ஜூசை லோ சுகர், கிட்னியில் கல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்த்து விடலாம். மற்றவர்கள் தாராளமாக இருந்த ஜூசை குடித்து வயிற்றில் இருக்கும் கழிவுகளை நீக்கி விடலாம் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
நன்றி - Lathika Food Diary Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.