வயிற்றுப் புண், வாய்ப் புண்... வாரம் 3 நாள் இந்தக் கீரை சாப்பிடுங்க: டாக்டர் ஷர்மிகா
வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் ஆகியவை குணமாக நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
சிலருக்கு அடிக்கடி வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படும். இதனால் சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியாது. இவை கடுமையான வலியையும் ஏற்படுத்து. இவற்றை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒவ்வொரு முறை உணவருந்தி முடித்ததும் சோம்பு எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். அதிலும், சர்க்கரை சேர்க்கப்பட்ட சோம்பை தவிர்த்து பச்சையாக இருக்கும் சோம்பை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம். இது வயிற்றுப் புண் மற்றும் வாய்ப் புண் தீவிரத்தை குறைக்க உதவும்.
இது தவிர வாரத்திற்கு மூன்று முறை கட்டாயம் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதில் இயற்கையாகவே புண்களை ஆற்றும் தன்மை இருக்கிறது. அந்த வகையில் மணத்தக்காளி கீரை நம் உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதேபோல், அதிமதுரத்தை சூரணமாகவும் சாப்பிடலாம். அது முடியாதவர்கள் வேராகவும் எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, அதிமதுர வேரை சிறு துண்டாக எடுத்து வாயில் போட்டு மென்று அதன் நீர விழுங்க வேண்டும். இதுவும் வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண் ஆகியவற்றுக்கு மருந்தாக செயல்படுகிறது.
Advertisment
Advertisements
மேலும், நெய்யை உருக்கி வாய்ப் புண் மீது லேசாக தடவலாம். இப்படி செய்தால் 7 நாட்களில் அது ஆறிவிடும். இதேபோல், திரிபலா சூரணம் வாங்கி அதனை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, வாயில் நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இதனை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
இந்த டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் வாய்ப் புண் மற்றும் வயிற்றுப் புண்ணை குணப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.