மதுவால் கல்லீரல் பாதிப்பு... காலையில் தண்ணீரில் ஒரு ஸ்பூன் இந்தப் பொடி சேர்த்து குடிங்க: டாக்டர் ஷர்மிகா

குடிப்பழக்கம் கொண்டவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, ஒரு மூலிகை பொடி எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் பாதிப்பு குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Doctor Sharmika Tips

மதுப்பழக்கம் கொண்டவர்களின் கல்லீரல் பெரிதும் பாதிக்கப்படும். இவை ஃபேட்டி லிவர், லிவர் சிராசிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து சிறுநீரக கோளாறு போன்ற தீவிர நோய்களையும் ஏற்படுத்தக் கூடும். 

Advertisment

எனவே, குடிப்பழக்கம் கொண்டவர்கள் அனைவரும் கட்டாயமாக அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். அதனைக் கைவிட சிரமமாக இருப்பதாக கருதுபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கரிசலாங்கண்ணி பொடி, கீழாநெல்லி பொடி மற்றும் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார். இந்தப் பொடிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கல்லீரலை கூடுமானவரை குணப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று பொடிகளையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, மூன்று பொடிகளையும் 100 கிராம் அளவிற்கு எடுத்து அதனை தனியாக ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்யலாம். காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பின்னர், கால் கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இந்த பொடியை போட்டு நன்றாக கலக்க வேண்டும். இத்துடன் ஒரு சிட்டிகை அளவிற்கு பட்டை பொடியையும் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

Advertisment
Advertisements

இவ்வாறு 45 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். பின்னர், ஒரு நாள் விட்டு மீண்டும் 45 நாட்களுக்கு இந்த பொடி கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்தால் கல்லீரல் பாதிப்பு குணமடையும். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களும் இந்தப் பொடியை தினசரி எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.

நன்றி - DAISY HOSPITAL Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Risks of too much alcohol consumption

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: