3 வேளை உணவுக்கு முன் இந்த காய்... அவ்வளவு நன்மை இருக்கு: பட்டியல் போடும் டாக்டர் ஷர்மிகா
வெள்ளரிக்காயில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்தும், இதனை தினசரி சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்றும் மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அவற்றை தற்போது பார்க்கலாம்.
வெள்ளரிக்காயில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்தும், இதனை தினசரி சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்றும் மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அவற்றை தற்போது பார்க்கலாம்.
பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் பொருட்களில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. அதன்படி, வெள்ளரிக்காயினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
நாம் மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு முன்பாகவும் ஒரு வெள்ளரிக்காயை உட்கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, குடலை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த வெள்ளரிக்காய் பயன்படுகிறது.
மேலும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வைத் திறனை கூர்மையாக்க வெள்ளரிக்காயை அவசியம் சாப்பிடலாம். இது தவிர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்யவும் இது உபயோகமாக இருக்கிறது.
சிறுநீர் கழிக்கும் போது ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரிலும் சிலருக்கு எரிச்சல் இருக்கும். இதனால், கடுமையான அசௌகரியம் மற்றும் வலி உருவாகும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு வெள்ளரிக்காயை சாப்பிடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். மேலும், மாதவிடாயினால் ஏற்படும் வலியையும் இது கட்டுப்படுத்துகிறது.
Advertisment
Advertisements
உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெள்ளரிக்காயை தாராளமாக சாப்பிடலாம். மலச்சிக்கலை சரி செய்யவும், உடலை குளிர்ச்சியாக்கவும் இது உதவுகிறது. இவை தவிர சருமத்தை ஆரோக்கியாமாக வைத்திருக்க வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளலாம்.
இத்தகைய நன்மைகள் வழங்கக் கூடிய வெள்ளரிக்காய்களை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக சாப்பிடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Sandy Cooks Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.