ஸ்கின் டல்லா இருக்கா? உருக்கிய நெய் 4 டேபிள் ஸ்பூன் இந்த நேரத்தில் சாப்பிடுங்க: டாக்டர் ஷர்மிகா
சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கான சிம்பிள் வழிமுறையை மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, இதனை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கான சிம்பிள் வழிமுறையை மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, இதனை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சருமத்தை எப்போதும் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், இதனை மேஜிக் போன்று ஒரே நாள் இரவில் நம்மால் செய்ய முடியாது.
Advertisment
இதற்காக நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். நம் உடல் ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக இருந்தால், சருமமும் பொலிவாக இருக்கும். சிலர் சருமத்தை பராமரிப்பது என்றால் முகத்திற்கு பூசும் க்ரீம், சீரம் போன்றவற்றை கருதுகின்றனர்.
ஆனால், முகம் மட்டுமல்லாமல் சருமம் முழுவதையும் ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்கள் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் சருமத்தை இயற்கையான முறையில் ஃபேஸ்க்ரீம் எதுவும் இல்லாமல் எப்படி பொலிவாக மாற்றுவது என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
இதற்காக, காலை நேரத்தில் சுமார் 3:30 மணியில் இருந்து 5 மணிக்குள் எழ வேண்டும். அந்த நேரத்தில் நான்கு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்றாக உருக்கி பருக வேண்டும். இதன் பின்னர், இரண்டு கிளாஸ் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இதையடுத்து, காலையில் வழக்கமாக மேற்கொள்ளும் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இந்த எளிமையான வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் நம் சருமத்தை பொலிவாக வைத்திருக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்தியுள்ளார். இந்த முறையை பின்பற்றினால் சருமம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஏனெனில், அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதற்காக இரவு சீக்கிரமாகவே உறங்கச் செல்வோம். இரவில் சீக்கிரம் உறங்கி, அதிகாலை நேரத்தில் எழுவது நல்ல வாழ்க்கை முறை மாற்றமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நன்றி - kaushi creates Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.