ஆண்மையை பெருக்கும் இந்த இலை... இந்த நேரத்துல இப்படி சாப்பிட்டு வாங்க: டாக்டர் சிந்து
வெற்றிலைக்கு இயற்கையாகவே ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று மருத்துவர் சிந்து கூறுகிறார். மேலும், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிலைக்கு இயற்கையாகவே ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று மருத்துவர் சிந்து கூறுகிறார். மேலும், இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய ஆண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.
Advertisment
நமது முன்னோர்கள் இயற்கையான முறையில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு பொருட்களை தங்கள் அன்றாட உணவில் சாப்பிட்டு வந்தனர். அந்த வகையில், ஆண்மையை அதிகரிக்கும் வழிமுறைகளை மருத்துவர் சிந்து தெரிவித்துள்ளார்.
வெற்றிலையில் ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர் சிந்து கூறுகிறார். ஏனெனில், இதில் காமத்தை பெருக்கும் தன்மை இருப்பதால், வெற்றிலையை தாம்பூலம் தரித்தல் என்று முன்னோர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இரவு நேரத்தில் வெற்றிலையை சாப்பிடலாம் என்று மருத்துவர் சிந்து அறிவுறுத்துகிறார். குறிப்பாக, வெற்றிலையுடன் சுக்கு, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம் என்று அவர் கூறுகிறார். இவை அனைத்திலும் ஆண்மையை அதிகரிக்கும் தன்மை இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்த காரணத்தினால் தான் வெற்றிலையை முன்னர் இருந்த காலத்தில் ஆண்கள் அதிகமாக பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இயற்கையான முறையில் ஆண்மையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றிலையை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், இது போன்று இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்கும் போது வேறு விதமான பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக் கூறுகள் இல்லை. அதனடிப்படையில், பாலியல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலையை சாப்பிடலாம்.
எனினும், ஆண்மைக் குறைபாடு தீவிரமாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Doctor Interview Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.