உங்க உடலில் 15% கெட்ட கொழுப்பை முதல்ல அகற்றுங்க... ஒரு பல் பூண்டு இப்படி சாப்பிட்டா போதும்!
பூண்டில் அல்லிசின் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவை 10-15% வரை குறைக்கலாம் என்று மருத்துவர் சிவசுந்தர் கூறுகிறார்.
பூண்டில் அல்லிசின் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவை 10-15% வரை குறைக்கலாம் என்று மருத்துவர் சிவசுந்தர் கூறுகிறார்.
பூண்டு ஒரு அதிசய உணவுப் பொருள். இதை தினமும் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி மருத்துவர் சிவசுந்தர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பூண்டின் முக்கியத்துவத்தையும், அதன் ஆரோக்கிய நன்மைகளையும் விரிவாக பார்க்கலாம்.
Advertisment
பூண்டில் அல்லிசின் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவை 10-15% வரை குறைக்கலாம் என்று மருத்துவர் சிவசுந்தர் கூறுகிறார். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் பூண்டு சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய பூண்டை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும். அதன்படி, பூண்டை சிறிய துண்டுகளாக வெட்டி அல்லது நசுக்கி, 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் சாப்பிடுவது நல்லது. இப்படி செய்வதால் பூண்டில் உள்ள அல்லிசின் என்ற வேதிப்பொருள் செயல்படத் தொடங்கும். இது உடலுக்கு அதிக நன்மைகளைத் தரும்.
பூண்டு, பார்ப்பதற்கு மிக எளிதாக தோன்றலாம். ஆனால் அதன் நன்மைகள் அளவிட முடியாதவை. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். எனவே, இதனை எல்லோரும் தங்களுடைய வாழ்வில் பின்பற்றலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.