காலை கடன் சுமுகமா போக... தினமும் காலையில் இந்தப் பழம் ஒண்ணு சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன் டிப்ஸ்

உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடக் கொடுக்கலாம். மேலும், மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டுப் பழம் சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடக் கொடுக்கலாம். மேலும், மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டுப் பழம் சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
SIvaraman tips

சிறு வயதில் இருந்தே சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பல்வேறு தகவல்களை, தமிழ் ஸ்பீச் பாக்ஸ் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அதன்படி, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தினசரி குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, வாழைப்பழம் சாப்பிடலாம் என்று அவர் கூறுகிறார். 

இதேபோல், பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது கொய்யா என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். வைட்டமின்கள் சி, பி, நார்ச்சத்து, லைகோபின் ஆகியவை இதில் இருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு இனிப்பு கொடுக்க வேண்டுமென்றால் பழங்களை கொடுக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

குறிப்பாக, காலை நேரத்தில் ஏதாவது ஒரு வகையான வாழைப்பழத்தை சாப்பிடலாம். அதிக நேரம் நின்று கொண்டே பணியாற்றும் நபர்களுக்கு ஏற்படும் கால் வலியை குணப்படுத்தும் ஆற்றல் செவ்வாழைக்கு இருக்கிறது. 

Advertisment
Advertisements

இது தவிர உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடக் கொடுக்கலாம். மேலும், மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டுப் பழம் சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். 

ஏனெனில், எல்லோருமே தினசரி மலம் கழிக்க வேண்டும். அதன்படி, காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Best tips to avoid constipation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: