ஈரலில் கொழுப்பை கரைக்க இந்தக் கீரை; உங்க வீட்டு அருகிலேயே கிடைக்கும்: மருத்துவர் சிவராமன்

ஈரலில் உள்ள கொழுப்பை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதற்கு கரிசலாங்கண்ணி கீரை பெரிதும் உதவுவதாக அவர் கூறுகிறார்.

ஈரலில் உள்ள கொழுப்பை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதற்கு கரிசலாங்கண்ணி கீரை பெரிதும் உதவுவதாக அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Fatty liver remedy

இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் ஃபேட்டி லிவர் என்று அறியப்படுகிற ஈரலைச் சுற்றி கொழுப்பு படியும் பாதிப்பால் அவதிப்பபடுகின்றனர். அது குறித்த பல்வேறு தகவல்களை ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி ஆகிய இரண்டும் கொழுப்பு படிந்த ஈரல் நோய்க்குச் சிறந்த மருந்தாக இருக்கின்றன. இவற்றை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது கஷாயமாக அருந்தலாம். கீழாநெல்லி குறிப்பாக மஞ்சள் காமாலைக்கு மருந்தாக அறியப்பட்டாலும், ஈரலைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மையை தரும். குறிப்பாக சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், ஈரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவும். இவற்றில் உள்ள அல்லிசின் இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதற்கும் உதவும். இது தவிர வெந்தயத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகளில் மீன் சாப்பிடலாம். ஆனால், இறைச்சி வகைகளை அதிகமாக எடுப்பதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக உடலுழைப்பு இல்லாதவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை கெட்ட கொழுப்பை அதிகரித்து ஈரல் செயல்பாட்டை பாதிக்கும்.

Advertisment
Advertisements

கொழுப்பு அதிகமாக சேர்வதால் ஈரல் சுருக்க நோய் ஏற்படலாம். இதனால் இரத்தத்தில் உள்ள தட்டு அணுக்களின் எண்ணிக்கை குறையும். இது உள் இரத்தப்போக்கு மற்றும் மூளை செயல்பாட்டை பாதிக்கும். மேலும், செரிமானத்திற்கு ஈரல் மிகவும் முக்கியம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். எனவே, ஈரலை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Health hazards of having a fatty liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: