இன்று பல இளைஞர்களுக்கு அல்சர் பிரச்சனை காணப்படுகிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயிற்றில் புண் ஏற்பட்டு, பல நேரங்களில் செரிமான பிரச்சனை ஏற்படுவதாக தெரிகிறது. சரியான நேரத்தில் உணவருந்தி, சீராக உறங்காமல் இருந்தால் அவர்களுக்கு வயிற்று உபாதைகள் வரக்கூடும்.
இப்படி வயிற்று பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த உணவாக விளங்குவதாக மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். ஏனென்றால், வாழைப்பழத்திற்கு இயல்பாகவே குடல் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. அல்சர், வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் இருப்பவர்கள் அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதே வாழைப்பழங்களை சாப்பிடலாம் என சிவராமன் பரிந்துரைக்கிறார்.
குறிப்பாக, உணவு சாப்பிடுவதற்கு முன்பாக வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என சிவராமன் தெரிவித்துள்ளார். இதேபோல் தொடர்ந்து உழைத்து சோர்வாக காணப்படுபவர்கள் வாழைப்பழங்களை சாப்பிடலாம். இவை உற்சாகத்தை கொடுக்கும்.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றுப் புண்களை ஆற்றும் மருந்து தயாரிப்பில் வாழைப்பழங்களை பயன்படுத்துவதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். மேலும், வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே நல்ல உறக்கத்தை கொடுக்கும் தன்மை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.