/indian-express-tamil/media/media_files/2025/03/26/YE1JZf8CxMS7e4P3jJAD.jpg)
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டிக்க வேண்டுமானால் தங்கள் அன்றாட உணவில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். கசப்பாக இருக்கும் பொருளில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி பலருக்கு துவர்ப்பு என்ற சுவை இருப்பதே தெரியாது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். வாழைப்பு, வாழத்தண்டு, சுண்டைக்காய், கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றில் துவர்ப்பு சுவை இருக்கிறது. அதிலும் கடுக்காயில் அறுசுவையும் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
ஆறு சுவை இருக்கும் பலகாரங்களை செயற்கையாக செய்து சாப்பிட்டால் நோய் உருவாகக் கூடும். ஆனால், ஆறு சுவை இருக்கும் கடுக்காயை சாப்பிட்டால் நோய் விலகும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். 40 அல்லது 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தினசரி தங்கள் உணவில் கடுக்காயை சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான நோய்த் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தின் காரணமாக பலரும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் நம் உடலுக்கு தேவையான சுவை மற்றும் தேவையற்ற சுவை ஆகியவற்றை ஆராய்ந்து சாப்பிட வேண்டும்.
உப்பு மற்றும் சர்க்கரையை குறைத்துக் கொண்டு கசப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய சுவை இருக்கும் பொருட்களை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.