தக்காளியின் தோல்... கேன்சர் வீரியத்தை குறைக்க இப்படி யூஸ் பண்ணுங்க: மருத்துவர் சிவராமன்
புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் குறித்து மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த வகையான உணவு முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதனை கூடுமானவரை தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் குறித்து மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த வகையான உணவு முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இதனை கூடுமானவரை தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் இருந்த காலத்தில் புற்றுநோய் பாதிப்பு அரிதாகவே காணப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் நிறைய பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, குழந்தைகள் கூட புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்தி விடலாம். ஆனால், சிலருக்கு நோயின் தாக்கம் அதிகரித்த பின்னர் தான் தெரிய வருகிறது. இதனால் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
உணவு முறை மாற்றங்களின் மூலமாக புற்றுநோய் பரவுவதை கூடுமானவரை தடுக்க முடியும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, அதிக இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் ஆற்றல் பழங்களில் உள்ள சத்துகளில் இருக்கின்றன. குறிப்பாக, நிறைய வண்ணங்களில் இருக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். சிவந்த நிறத்தில் இருக்கும் பழங்கள் மற்றும் ஆரஞ்சி, மஞ்சள் போன்ற வண்ணங்களில் இருக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
குறிப்பிடத்தக்க வகையில் பப்பாளி, மாதுளம், அன்னாசி, தக்காளி ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ளலாம். இதில் தக்காளி பழத்தின் மேல் தோலில் இருக்கும் சிவந்த நிறத்தை லைகோபின் என்ற சத்து கொடுக்கிறது. இதற்காக, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு தக்காளி பழங்களின் தோலை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் பாதிப்பை தடுக்க முடியும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இதில், ஆண்களுக்கு பரவக்கூடிய புரோஸ்டேட் கேன்சரை தடுக்கும் தன்மை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இது போன்ற சத்தான உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்; புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் ஓரளவிற்கு தற்காத்துக் கொள்ள முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.