உறைந்த நெஞ்சு சளியை அகற்ற இந்தக் கீரை; பவுடராக வாங்கி காலையில் தேநீராக குடித்துப் பாருங்க!
காபி மற்றும் டீ போன்றவற்றுக்கு மாற்றாக நாம் அருந்தக் கூடிய சில ஆரோக்கியமான பானங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். இவை நம் உடல் நலனை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிக்க வேண்டும் என்பதே எல்லோரது தேர்வாகவும் இருக்கிறது. அந்த அளவிற்கு நாம் காபி, டீ போன்றவற்றுக்கு பழக்கப்பட்டு விட்டோம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஆனால், இவற்றை தவிர பல ஆரோக்கியமான பானங்களை நாம் அருந்தலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
தேயிலையை தேநீராக அருந்துவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக் கூடியது. ஆனால், நாம் தேநீரை பாயாசம் பக்குவத்திற்கு அருந்துகிறோம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். நன்றாக கொதிக்கும் தண்ணீரில், தேயிலை போட்டு விட்டு மூடி விட வேண்டும். அதன் பின்னர் 3 நிமிடங்கள் கழித்து அதனை வடிகட்டி குடிப்பது தான் தேநீர் என அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், அவசியம் இனிப்பு வேண்டும் எனக் கேட்பவர்கள் ஒரு துளி தேன் அல்லது சிறிய துண்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்க்கலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். தேயிலையில் பால் சேர்க்கும் போது, அதன் சத்துகள் அனைத்தும் இழக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதேபோல், ஆவாரை குடிநீரை தேநீருக்கு மாற்றாக பருகலாம். ஆவாரை குடிநீரை கசாயமாக குடிக்கும் போது சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இஞ்சி தேநீர், சுக்கு மல்லி குடிநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
நெல்லிக்காய் பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அத்துடன் ஒரு துளி தேன் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளுக்கு சளி, இருமல் அடிக்கடி ஏற்பட்டால் அவர்களுக்கு கரிசலாங்கண்ணி கசாயம் கொடுக்கலாம்.
அதன்படி, கரிசலாங்கண்ணி பொடியை காலை நேரத்தில் தேநீராக குடித்தால் நெஞ்சில் உறைந்திருக்கும் சளி முற்றிலும் குணமாகி விடும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.