தினமும் ஒரு வாழைப்பழம்; எந்த வகை, என்ன நன்மை? மருத்துவர் சிவராமன்

அனைவருக்கும் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய வாழைப்பழம் எந்த அளவுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது, தினம் ஒரு வாழைப் பழம் சாப்பிட வேண்டும், எந்த வகை வாழைப் பழத்தில் என்ன நன்மை என்பதை மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

அனைவருக்கும் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய வாழைப்பழம் எந்த அளவுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது, தினம் ஒரு வாழைப் பழம் சாப்பிட வேண்டும், எந்த வகை வாழைப் பழத்தில் என்ன நன்மை என்பதை மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
dr sivaraman

ஓவ்வொரு வகை வாழைப் பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

அனைவருக்கும் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய வாழைப்பழம் எந்த அளவுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது, தினம் ஒரு வாழைப் பழம் சாப்பிட வேண்டும், எந்த வகை வாழைப் பழத்தில் என்ன நன்மை என்பதை மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். 

Advertisment

ஓவ்வொரு வகை வாழைப் பழத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி ஹெல்தி தமிழ்நாடு (Healthy Tamilnadu) என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

மருத்துவர் சிவராமன் தமிழ்நாட்டின் பல ஊர்களில் பாரம்பரிய உணவுகள், இயற்கை உணவுகள், சித்த மருத்துவம் ஆகியவற்றின் பெருமைகளை அறிவியல் மொழியில் பேசி பரப்பி வருகிறார். மருத்துவர் சிவராமன் வாழைப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் பற்றி கூறியுள்ளார். ஒவ்வொரு வாழைப் பழத்துக்கு ஒரு அற்புதமான மருத்துவ குணம் இருக்கிறது என்பது வியபாக இருக்கிறது.

Advertisment
Advertisements

மருத்துவர் சிவராமன் கூறுகிறார்: “வாழைப்பழம் ஒரு விசசஷயத்தை எடுத்தோம் என்றால் இந்தப் களியக்காவிளையில் இருந்து அந்தப் பக்கம் தருமபுரி வரைக்கும் எத்தனை வகைகள் இருக்கிறது. செவ்வாழைப் பழம், நேந்திரன் வாழை நம்முடைய தமிழ்நாட்டு எல்லையில் களியக்காவிளையில் கிடைக்கும். இந்த செவ்வாழைப் பழம் நின்றுகொண்டே பணியாற்றக்கூடிய ஒரு ஆசிரியரோ அல்லது காவலாளியோ அவர்களுக்கு வரக்கூடிய குதிகால் வலி, பெண்கள் அடுப்பங்கரையில் காலையில் தூங்கி எழுந்திருந்து காலை ஊன்றிய உடனே வலி வரும் என்பார்கள். குதிகாலில் வரக்கூடிய வலிக்கு ‘கால்கேனியல் ஸ்பர் பிளாண்டர் ஃபாசட்டிஸ்’ (calcaneal spur plantar fasciitis) என்று பெயர்.  இதற்கு செவ்வாழை மிகச் சிறப்பானது. 

ஒரு குழந்தை உடல் எடை கூடவில்லை, ரொம்ப மெலிந்து இருக்கிறான் என்றால் அவனுக்கு நேந்திரன் வாழை கொடுங்கள். சின்னக் குழந்தை, தாய்ப்பாலுக்குப் பிறகு, திட உணவைப் பழக்க வேண்டும் என்றால் முதலில் கொடுக்கப்பட வேண்டிய பழம் மட்டிப் பழம் (ஒருவகை வாழைப்பழம்) இது நாகர்கோவிலில் இருக்கிறது. சின்னதாக விரல் அளவுதான் இருக்கும். 

மூல நோய் தொந்தரவு இருக்கிறது,  மூலச் சூடு இருக்கிறது என்றால், பௌத்திரம் இருக்கிறது, ஆசனவாயில் வெடிப்பு இருக்கிறது என்றால் திருநெல்வேலியில் நாட்டுப் பழம் என்ற ஒன்று இருக்கிறது. அதை உரித்தோம் என்றால், நாரும் பழமும் இணைந்து இருக்கும். எது தோல், எது நார் என்று தெரியாத அளவுக்கு அதிக நார்ச்சத்துள்ள ஒரு பழம். அந்த பழத்தை இங்கே மொந்தன் வாழை என்று சொல்வார்கள். அது நாட்டு வாழைப்பழம். 

அப்படியே இந்தப் பக்கம் திருச்சியில் மோரிஸ் வாழைப் பழம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இருந்தால், வயிற்றில் குடல் புண்கள் இருந்தால், உடல் சூட்டைக் குறைப்பதற்கு அந்த மோரிஸ் வாழை பச்சைக் கலரில் இருக்கும் அதைக் கொடுக்க வேண்டும்.

தருமபுரியில் ஏலக்கி, திண்டுக்கல்லின் சிறுமலைப் பழம், ஈரோட்டில் இருக்கக்கூடிய தேன்கடி வாழை இப்படி ஒவ்வொரு வாழைப்பழத்துக்கும் ஒரு மருத்துவ குணத்தை நம்ம ஊரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: