ஓட்ஸ்-ஐ விட பல மடங்கு சத்து அதிகம்... நம்ம ஊரின் இந்த உணவுப் பொருள் கிடைச்சா விடாதீங்க: டாக்டர் சிவராமன்
வணிக நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட உணவு சந்தையின் விளைவாகவே இது போன்ற வெளிநாட்டு பொருட்களான ஓட்ஸை நாம் இப்போது அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகிறோம் என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார்.
வணிக நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட உணவு சந்தையின் விளைவாகவே இது போன்ற வெளிநாட்டு பொருட்களான ஓட்ஸை நாம் இப்போது அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகிறோம் என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார்.
நமது ஊரில் கிடைக்கும் உணவுகளை விட வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்து பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக சத்து இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறு நினைக்க கூடாது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
வெளிநாட்டில் இருந்து நமது ஊருக்கு ஓட்ஸ் இறக்குமதி செய்யப்படுகிறது. உடல் எடையை குறைக்க ஓட்ஸ் சாப்பிடுவதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், உடல் எடை குறைப்புக்கு ஓட்ஸ் அதிக அளவில் பயன் அளிப்பதில்லை என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்ஸ் குதிரைகளுக்காகவும், பிஸ்கட் நாய்களுக்காகவும் உருவாக்கப்பட்டது என்று வெளிநாட்டினர் அறிவித்துள்ளதாக சிவராமன் கூறுகிறார். ஆனால், நம்முடைய ஊரில் இவற்றை மனிதர்கள் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஓட்ஸை விட நமது ஊரில் இருக்கும் சிறுதானியங்கள் அதிக பலன் அளிப்பவை என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
தினை அரிசி, கம்பு, சோளம், குதிரைவாலி போன்றவற்றில் இருக்கும் ஏராளமான சத்துகள் ஓட்ஸில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கம்பு அரிசியில் இருக்கும் இரும்புச் சத்து, கேழ்வரகில் இருக்கும் கால்சியம் போன்றவை ஓட்ஸில் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
வணிக நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட உணவு சந்தையின் விளைவாகவே இது போன்ற வெளிநாட்டு பொருட்களான ஓட்ஸை நாம் இப்போது அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகிறோம் என்று மருத்துவர் சிவராமன் வலியுறுத்துகிறார். எனவே, நமது ஊரில் விளையக் கூடிய சிறுதானியங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் உறுதி ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.