இஞ்சி, சீரகம், பூண்டு, இலவங்கம், கருஞ்சீரகம் உள்ளிட்டவை புற்றுநோய் வருவதில் இருந்து தடுப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தலைமுறையினர் பலர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை பழக்கமும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், புற்றுநோயை தடுக்கும் பொருள்களை நம் அன்றாட உணவில் எவ்வாறு சேர்த்துக் கொள்வது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இஞ்சி, சீரகம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், கருஞ்சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை ஆகியவற்றை வாரத்தில் ஒரு நாள் பிரியாணி அல்லது குருமாவில் மட்டுமே நாம் பயன்படுத்துவதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இவற்றில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குடல் தொடர்பான புற்றுநோய், மார்பக புற்றுநோயை தடுக்க பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். ஹீலிங் ஸ்பைசஸ் என்ற புத்தகத்தில் இது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாம் தினசரி பருகும் தேநீரில் இந்த பொருள்களை சேர்த்துக் கொள்ளலாம் என சிவராமன் கூறியுள்ளார். அதன்படி, 100 கிராம் நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கன்னி பொடிகள் சுமார் 3 மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் எனத் தெரிவித்துள்ள சிவராமன், அவற்றை சாதாரண தேநீர் போன்று தயாரித்து அத்துடன் சீரகம் அல்லது இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் சேர்த்து பயன்படுத்தலாம் எனக் பரிந்துரைத்துள்ளார்.
இதனால், நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“